Rudraksha Guide

ருத்ராட்சத்தின்
அடிப்படை அம்சங்கள்

படியுங்கள்
1

மேலும் தெரிந்துகொள்ள

படியுங்கள்
2

பாதுகாப்பதும் பராமரிப்பதும்

படியுங்கள்
3

பதப்படுத்துவது

படியுங்கள்
4

ருத்ராட்சத்தின் அடிப்படை அம்சங்கள்

ருத்ராட்சம் என்றால் என்ன?

ருத்ராட்சம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் வளரும் Elaeocarpus Ganitrus என்ற தாவரவியல் பெயருடைய மரத்தின் விதைகளாகும். "சிவனுடைய கண்ணீர்" என்று கூறப்படும் இந்த ருத்ராட்சத்தின் தோற்றம் குறித்து பல கதைகள் உண்டு. ருத்ராட்சம் எனும் சொல், சிவனைக் குறிக்கும். 'ருத்ரா' எனும் சொல்லில் இருந்தும், கண்ணீரைக் குறிக்கும் 'அட்சம்' எனும் சொல்லில் இருந்தும் வருகிறது.

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

ருத்ராட்சம், ஒருவரது உடல் மற்றும் மன சமநிலையைக் காப்பதற்கு உதவுகிறது. ஆன்மீகத் தேடுதலில் இருப்போருக்கு, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. பலவகையான உடல், மனம் மற்றும் மனதளவிலான பிரச்சனையால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய அதன் ஆற்றலால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

ருத்ராட்சத்தை யார் அணியலாம்?

இனம், மதம், நாடு, பாலினம், கலாச்சாரம் ஆகிய பாகுபாடுகள் தாண்டி எவரும் ருத்ராட்சம் அணியலாம். மனநிலையும் உடல்நிலையும் எப்படி இருந்தாலும், ஒருவர் தன் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் ருத்ராட்சம் அணியலாம். இதனால் பலனடைய குழந்தைகள், மாணவர்கள், முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். 5ம் கேள்வியை பார்க்கவும்.

பஞ்சமுகி ருத்ராட்ச மாலையை எப்படி தேர்வுசெய்வது?

(ருத்ராட்ச மணிகள் 5 மிமீ முதல் 8 மிமீ வரை விட்டமுடைய மாலைகள் உள்ளன) நாங்கள் வழங்கும் பஞ்சமுகி மாலைகளில் ருத்ராட்ச மணிகளின் விட்டம் என்னவாக இருந்தாலும், அனைத்தும் அதே தரமும் தாக்கமும் பலன்களும் கொண்டவையாக இருக்கின்றன. 7 அளவுகளில் நீங்கள் விரும்பும் மாலையை நீங்கள் தேர்வுசெய்யலாம். சிறிய மணிகளை கண்டெடுப்பது கடினம் என்பதால் விலையில் வித்தியாசம் இருக்கிறது.

ஒவ்வொரு வகை ருத்ராட்சமும் வழங்கும் பலன்கள் என்ன?

நாங்கள் வழங்கும் ருத்ராட்சங்கள் கவனமாக தேர்வுசெய்யப்பட்டு, தரம் பரிசோதிக்கப்பட்டு, பின்பு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகை ருத்ராட்சமும் வழங்கும் பலன்கள் கீழ்வருமாறு:

  • - பஞ்சமுகி: இந்த ஐந்துமுக ருத்ராட்சத்தை 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அணியலாம். இது உள்நிலையில் விடுதலையும் தூய்மையும் அடைய உதவுகிறது.
  • - த்விமுகி: இந்த இருமுக ருத்ராட்சம் திருமணமான தம்பதிகளுக்கானது. மணவாழ்க்கைக்கு உதவும் இந்த ருத்ராட்சத்தை கணவன் மனைவி இருவரும் அணிந்துகொள்ள வேண்டும்.
  • - ஷண்முகி: இந்த ஆறுமுக ருத்ராட்சம், 14 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கானது. இது சீரான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • - கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்ச மணிகள் சேர்ந்தது போல காட்சியளிக்கும் இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அணியலாம். இது ஐஸ்வரியமடையவும், ஈடா பிங்களா சக்தி நாடிகளை சமன்படுத்தவும், ஏழு சக்கரங்களைத் தூண்டவும் உதவுகிறது.
புதிய ருத்ராட்சத்தை எப்படி பதப்படுத்துவது?

புதிய ருத்ராட்ச மணிகளை பதப்படுத்த, அவற்றை 24 மணி நேரம் நெய்யில் ஊரவைத்து, பின்பு 24 மணி நேரம் கொழுப்பு நீக்கப்படாத பாலில் ஊரவைக்க வேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அவற்றை சோப்பு அல்லது பிற சுத்தப்படுத்தும் பொருள் கொண்டு கழுவக்கூடாது. இப்படி பதப்படுத்தும்போது ருத்ராட்ச மணிகளின் நிறம் மாறலாம், இவை இயற்கையாக கிடைக்கும் விதைகள் என்பதால் இது சாதாரணம்தான். இப்படி பதப்படுத்தும்போது நூலின் சாயம் சற்று வெளியேறுவதும் சாதாரணம்தான். கீழே விளக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ருத்ராட்சம் தொடர்ந்து பதப்படுத்தப்பட வேண்டும்.

ருத்ராட்சத்தை எவ்வளவு மாதங்களுக்கு ஒருமுறை பதப்படுத்துவது?

ருத்ராட்சத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை பதப்படுத்த வேண்டும். அவற்றை 24 மணி நேரம் நெய்யில் ஊரவைத்து, பின்பு 24 மணி நேரம் கொழுப்பு நீக்கப்படாத பாலில் ஊரவைக்க வேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அவற்றை சோப்பு அல்லது பிற சுத்தப்படுத்தும் பொருள் கொண்டு கழுவக்கூடாது.

நான் ருத்ராட்ச மாலையை எப்போது அணிவது?

ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாம். நீங்கள் தூங்கும்போதும் குளியலின்போதும்கூட அணியலாம். பச்சைத் தண்ணீரில் குளிக்கும் அதே சமயம் எந்த ரசாயன சோப்பும் பயன்படுத்தாமல் இருந்தால், ருத்ராட்சத்தில் படும் தண்ணீர் உடலில் படுவது நல்லது. ஆனால் ரசாயன சோப்பு அல்லது வெந்நீர் பயன்படுத்தினால் சிறிது நாட்களில் ருத்ராட்சத்தில் விரிசல் விழுந்துவிடலாம், எனவே அப்போது ருத்ராட்சம் அணிவதை தவிர்க்கவும்.

மேலும் தெரிந்துகொள்ள

ருத்ராட்ச மாலையில் சரியாக 108 மணிகள் இருக்கவேண்டுமா?

இல்லை, பாரம்பரியமாக 108 மணிகளோடு ஒரு பிந்து இருக்கும். பெரியவர்கள் இதை அணியும்போது 84 மணிகளோடு ஒரு பிந்துவுக்குக் குறையாமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது - இதற்கு அதிகமான எண்ணிக்கையாக இருந்தால் போதும். ருத்ராட்ச மணிகளின் விட்டத்தைப் பொறுத்து ஒவ்வொரு மாலையிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் ருத்ராட்ச மணிகள் இருக்கும்.

மிகச்சிறிய ருத்ராட்ச மணிகள் அதிக ஆன்மீக மகத்துவம் கொண்டவையா?

ருத்ராட்ச மணிகளின் விட்டம் என்னவாக இருந்தாலும், அனைத்தும் அதே தரமும் தாக்கமும் பலன்களும் கொண்டவையாக இருக்கின்றன. 7 அளவுகளில் நீங்கள் விரும்பும் மாலையை நீங்கள் தேர்வுசெய்யலாம். சிறிய மணிகளை கண்டெடுப்பது கடினம் என்பதால் விலையில் வித்தியாசம் இருக்கிறது.

நான் என்னுடைய ருத்ராட்சத்தை இன்னொருவர் பயன்படுத்த பகிர்ந்துகொள்ள முடியுமா?

கூடாது, அணிபவரின் குணங்களுக்கேற்ப ருத்ராட்சத்தின் தன்மையில் மாற்றம் ஏற்படுவதால், ருத்ராட்சத்தை நீங்கள் எவருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

ஹடயோகா பயிற்சிகள் செய்யும்போது ருத்ராட்சத்தை கழட்டினால் அதை எங்கே வைப்பது?

ருத்ராட்சத்தை பட்டுத்துணி அல்லது செம்புப் பாத்திரத்தில் வைப்பது சிறந்தது. செம்பு, பாலைத் திரிந்துபோக வைக்கக்கூடியது என்பதால், ருத்ராட்சத்தை பதப்படுத்தும்போது நீங்கள் செம்புப் பாத்திரத்தை பயன்படுத்தக்கூடாது.

பஞ்சமுகி மாலையின் பிந்து, கழுத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கவேண்டுமா?

பஞ்சமுகி மாலையின் பிந்து கழுத்தில் எந்தவொரு குறிப்பிட்ட இடத்திலும் இருக்கவேண்டிய அவசியமில்லை - நீங்கள் நடக்கும்போதும் தூங்கும்போதும் சாதனா செய்யும்போதும் ருத்ராட்சம் கழுத்தில் இடம்மாறும். பிந்து நெஞ்சில் நடுவில் இருக்கும்படி நீங்கள் சரிசெய்துகொள்ளலாம், ஆனால் மீண்டும் நடமாடும்போது அது மீண்டும் இடம்மாறும், அது பரவாயில்லை.

ருத்ராட்சம் அதன் அதிர்வுகளை இழந்துள்ளதா என்று எப்படி சொல்வது?

ருத்ராட்சத்திற்கு இயற்கையில் ஒரு குறிப்பிட்ட குணமுண்டு, எனவே ருத்ராட்சத்திற்கு மதிப்பும் கவனமும் கொடுக்கும் விதமாக உடலில் அணிவது முக்கியம். ருத்ராட்சத்தை ஆபரணங்களைப் போல அணிந்து பின்பு கழட்டிவைப்பது கூடாது. ஒருவர் ருத்ராட்சம் அணிவதை தேர்வுசெய்யும்போது, அது அவர்களுடைய ஒரு அங்கமாக மாறிவிட வேண்டும்.

பாதுகாப்பதும் பராமரிப்பதும்

ஒருவர் தனது ருத்ராட்சத்தை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால், அதை பட்டுத்துணியில் பூஜையறையில் வைக்கவேண்டும்.

ருத்ராட்சத்திற்கு சில சூழ்நிலைகள் உகந்ததாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு, ருத்ராட்சத்தை சிமெண்ட் தரையில் 48-நாள் மண்டலம் அல்லது அதற்கு மேலாக வைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதை பயன்படுத்தக்கூடாது. மீண்டும் அதை பதப்படுத்துவது அது இழந்த தன்மையை மீட்டெடுக்காது. இப்படிப்பட்ட ருத்ராட்சத்தை முடிந்தால் மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது ஆறு, கிணறு போன்ற நீர்நிலைகளில் அர்ப்பணிக்க வேண்டும்.

மாலையில் சில மணிகள் உடைந்தால், நான் புதிய ருத்ராட்ச மாலையை வாங்கவேண்டுமா?

மாலையில் விரிசல் விழுந்த ருத்ராட்ச மணிகள் இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும், அவற்றின் சக்திநிலையில் மாற்றம் ஏற்படுவதால், அணிபவருக்கு உகந்ததாக இல்லாமலிருக்க வாய்ப்பிருக்கிறது. 14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மொத்தம் 84 மணிகளோடு ஒரு பிந்து இருக்கவேண்டும். இதற்கு மேற்பட்ட எந்த எண்ணிக்கையாக இருந்தாலும் அணியலாம்.

உடைந்த ருத்ராட்சங்களை நூலிலிருந்து கழட்டி நீக்கிவிட்டு மற்றவற்றை மீண்டும் கோர்க்கலாம். எந்த ருத்ராட்ச மணியையும் பிந்துவாக கோர்க்கலாம் - முன்பு பிந்துவாக இருந்த அதே ருத்ராட்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. 14 வயதுக்குக் குறைவானவர்கள் ஷண்முகி ருத்ராட்சத்தை மட்டுமே அணியவேண்டும்.

ருத்ராட்ச மாலையின் மணிகள் ஒன்றோடு ஒன்று தொடவேண்டுமா?

ருத்ராட்ச மாலையால் முழுமையாக பலனடைவதற்கு மாலையில் ருத்ராட்சங்கள் எப்போதும் ஒன்றோடு ஒன்று தொட்டிருக்க வேண்டும். இது மாலையில் சக்தி ஓட்டத்திற்கும் உகந்ததாக இருக்கும். ருத்ராட்ச மணிகளை அதிக இறுக்கமாக கோர்க்காதிருப்பது முக்கியம், இல்லாவிட்டால் அவை ஒன்றோடு ஒன்று உரசி சேதமடைந்துவிடும். மென்மையாக மணிகள் அனைத்தும் தொட்டிருக்கும்படி கோர்ப்பது சிறந்தது.

ருத்ராட்சத்தை பத்திரமாக வைக்கவும் பதப்படுத்தவும் பயன்படுத்தக்கூடிய சிறந்த பாத்திரம் என்ன?

தனித்துவமான கட்டமைப்பு கொண்ட இயற்கை விதைகளாக இருப்பதால், இவற்றை இயற்கையான பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது. பதப்படுத்தும்போது மண், கண்ணாடி அல்லது மரத்தாலான பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. அதற்கு மாற்றாக தங்கம் அல்லது வெள்ளிக் கின்னங்கள் இருந்தால் பயன்படுத்தலாம்.

பதப்படுத்தும்போது செம்பு பாத்திரம் பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம், ஏனென்றால் செம்பு, நெய்யுடனும் பாலுடனும் வேதியியல் எதிர்வினையாற்றி அவற்றின் தன்மையில் மாற்றம் ஏற்படுத்தும். பதப்படுத்தாதபோது செம்பு பாத்திரத்தில் வைக்கலாம். ருத்ராட்சத்தை வைக்கவும் பதப்படுத்தவும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும், ஏனென்றால் பிளாஸ்டிக்கிலிருந்து நச்சுப்பொருட்கள் கசியலாம்.

பட்டுநூலின் தரத்தாலும் உறுதியாலும் ருத்ராட்சம் கோர்ப்பதற்கு அது சிறந்த இயற்கை நூலாக இருக்கிறது. ருத்ராட்ச மணிகள் உடையாத விதமாக கவனமாக கோர்க்கப்பட்டால் மெல்லிய தங்கம் அல்லது வெள்ளி செயின்களையும் பயன்படுத்தலாம்.

பஞ்சமுகி ருத்ராட்ச மாலையுடன் கௌரிசங்கர் ருத்ராட்சத்தை எப்படி இணைப்பது?

கௌரிஷங்கர் ருத்ராட்சத்துடன் வரும் உலோக வளையத்தைக் கொண்டு அதை நீங்கள் பஞ்சமுகி மாலையிலோ, பட்டு நூலிலோ, தங்கம் அல்லது வெள்ளி செயினிலோ சுலபமாக கோர்க்கலாம். கௌரிஷங்கர் ருத்ராட்சத்தை பஞ்சமுகி மாலையில் கோர்க்கும்போது, மாலையில் ஏற்கனவே இருக்கும் பிந்து அப்படியே இருப்பது அவசியம். பிந்துவுக்குக் கீழ் கூடுதல் மணியாக இதனை கோர்க்கலாம். சக்தி ஓட்டம் ஒரு வட்டமாக இல்லாதிருப்பதற்கு பிந்து அவசியமாக இருக்கிறது. சக்தி ஓட்டம் வட்டமாகினால் சிலருக்கு தலைசுற்றுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.

பதப்படுத்துவது

போலி ருத்ராட்சத்தை அடையாளம் காண்பதற்கு ஏதாவது எளிய வழி உள்ளதா?

சத்குரு: பாரம்பரியமாக, இதனை தங்கள் வாழ்க்கையின் புனிதமான கடமையாகக் கருதியவர்கள் மட்டுமே மாலைகளை கையாண்டனர். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இதை மட்டுமே செய்தார்கள். தங்கள் பிழைப்பையும் இதன்மூலம் நடத்திக்கொண்டார்கள், ஆனால் இதனை மக்களுக்கு அர்ப்பணிப்பது அவர்கள் வாழ்க்கையில் ஒரு புனிதமான கடமையாக இருந்தது. ஆனால் இதை மக்கள் அதிகம் தேடத் துவங்கியதும் வர்த்தகம் வந்துவிட்டது. இன்று இந்தியாவில் பத்ராட்சம் எனப்படும் விஷத்தன்மையுடைய விதைகள், உத்தரபிரதேசம், பீஹார் பகுதிகளில் அதிகம் விளைகிறது. பார்ப்பதற்கு இவ்விரண்டு விதைகளும் ஒரேமாதிரி தோற்றமளிக்கும். உங்களால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. அதைக் கையில் எடுத்தால் மட்டும்தான், உங்களுக்கு கூர்மையான உணர்திறன் இருந்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள். அந்த விதைகளை உடலில் அணியக்கூடாது, ஆனால் உண்மையான ருத்ராட்சம் என்று கூறப்பட்டு பல இடங்களில் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே நம்பகமான இடத்திலிருந்து நீங்கள் ருத்ராட்சம் வாங்குவது முக்கியம்.

ருத்ராட்சத்தைப் பதப்படுத்துவது அதற்கு மீண்டும் சக்தியூட்டுமா? அல்லது ருத்ராட்சம் உடையாமலிருக்க பதப்படுத்த மட்டும் செய்யுமா?

ருத்ராட்சம் மென்மையாகி உடைந்துபோகாமல் இருக்கும்படி அதன் ஆயுளை நீட்டிருப்பதற்குத்தான் அதை பதப்படுத்த வேண்டியிருக்கிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை நெய்யிலும் பின்பு பாலிலும் ஊறவைத்து, 1 அல்லது 2 ஆண்டிற்கு ஒருமுறை நல்லெண்ணெயில் ஊறவைப்பது ருத்ராட்ச மணிகள் உறுதியாக இருப்பதற்கு உதவியாக இருக்கும். பதப்படுத்துவது ருத்ராட்சத்திற்கு மீண்டும் சக்தியூட்டாது. ருத்ராட்ச மணிகள் ஒரு குறிப்பிட்ட குணத்துடன் இருப்பது அவற்றின் இயற்கையான குணத்தால் மட்டுமே.

பதப்படுத்திய பிறகு, ருத்ராட்சம் சற்று எண்ணெய் பிசுபிசுப்புடன் வாசம் வீசுகிறதே; இதற்கு ஏதோவொன்று செய்யமுடியுமா?

ருத்ராட்சத்தைப் பதப்படுத்திய பிறகு அது சற்று பிசுபிசுப்புடனும் நெய் மற்றும் பால் வாசனையுடனும் இருக்கலாம். பதப்படுத்தும் செயல்முறையின் கடைசி படியாக அதன்மேல் சிறிதளவு விபூதி பூசினால், கூடுதல் எண்ணெயை அது எடுத்துவிடும். இப்படி செய்வதற்கு உங்கள் உள்ளங்கைகளில் சிறிதளவு விபூதி வைத்துக்கொண்டு அதில் ருத்ராட்சத்தை மென்மையாக உருட்டி எடுக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு ருத்ராட்சத்தை தண்ணீரிலோ சோப்பிலோ கழுவக்கூடாது. பாலில் இருந்து எடுத்தவுடன் அப்படியே விபூதியைப் பூசவேண்டும்.

பதப்படுத்திய பிறகு அந்த நெய்யை பயன்படுத்தலாமா? அடுத்தமுறை ருத்ராட்சத்தை பதப்படுத்தவோ சமையலுக்கோ பயன்படுத்தலாமா?

24 மணி நேரம் ருத்ராட்சம் ஊறிய நெய்யை, செடிக்கு உணவாகவோ, விளக்குக்கு எண்ணெயாகவோ, அடுத்தமுறை ருத்ராட்சத்தை பதப்படுத்தவோ பயன்படுத்தலாம். அதை உணவாகவோ சமையலுக்கோ பயன்படுத்தக்கூடாது.

புதிய ருத்ராட்சத்தைப் பதப்படுத்தும்போது, சிலசமயம் மஞ்சள் நிறத்தில் ஏதோவொன்று சுரக்கிறதே - இது சாதாரணம்தானா?

ருத்ராட்சத்தை வாங்கி முதல்முறையாக பதப்படுத்தும்போது, இந்த மணிகளிலிருந்து இயற்கையாகவே ஏதாவது கசிவு ஏற்படலாம். அதன் நிறம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் சாதாரணமாக இந்த கசிவு மஞ்சளாகவோ கருப்பாகவோ இருக்கும். இது விளைய வைத்தவர்களிடம் இருந்து வாங்கியபிறகு பாதுகாப்பாக வைத்திருக்க மண்ணால் மூடப்படுவதால் ஏற்படுகிறது. ருத்ராட்சத்தின்மேல் மண்ணைப் பூசும்போது, அது மரத்திலிருந்து வந்தபோது இருந்த புதுமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த மண் எங்கிருந்து வந்தது என்பதைப் பொறுத்து கசிவின் நிறம் மாறலாம்.

பருத்ராட்ச மணிகள் பயன்படுத்தப் பயன்படுத்த கருத்துப்போகுமா? இப்படி ஏன் நடக்கிறது?

காலப்போக்கில் ருத்ராட்சம் கருத்துப்போவது, அது உள்ளெடுத்துக்கொள்ளும் பொருட்களால்தான்; இதில் நீங்கள் அவ்வப்போது பதப்படுத்தப் பயன்படுத்தும் நெய், பால், நல்லெண்ணெயும், இயற்கையான உங்கள் உடல் எண்ணெயும் வியர்வையும் உள்ளடங்கும். இது இயற்கையான ஒரு செயல்முறை; இது உங்கள் சாதனா அல்லது ஆன்மீகப் பயிற்சிகளுடன் எவ்விதத்திலும் தொடர்புடையது அல்ல.

Rudraksha Offerings

© 2022 - 2024 Isha Life Pvt. Ltd. All Rights Reserved.