https://www.rpspharmacy.com/product/malegra-fxt/

சத்குரு – ஞானத்தின் பிரம்மாண்டம் – சில துளிகள் [Sadhguru – Gnanathin Brahmandam – Sila Thuligal] (MP3 Audio)

‘சத்குரு – ஞானத்தின் பிரம்மாண்டம்’ என்பது மொத்தம் 582 பக்கங்கள் கொண்ட ஈஷாவின் நூல். ஈஷா, சத்குரு இவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க முற்படும் முதல் நூல் இதுதான். ஈஷாவின் மிகவும் ஆரம்பகால தியான அன்பர்கள், தங்களின் அன்றாட பிரச்சனைகளிலிருந்து முக்தி என்பது வரை, பல விஷயங்களை சத்குரு அவர்களிடம் மிகமிக விளக்கமாக கேட்டுப் பெற்ற பதில்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன. பல புத்தகங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதை இந்த ஒரு புத்தகம் படித்தே தெரிந்து கொள்ளலாம். இந்த நூலிலிருந்து முக்கியமான பல பகுதிகளை எடுத்து, தனது அனுபவங்களையும் சேர்த்து, மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றி வருகிறார்கள்.

நூலை முழுவதும் படித்து முடித்தவர்கள் கூட வியந்து பாராட்டுவதாக அந்த சொற்பொழிவு உள்ளது. எனவே இந்த நூல் வாங்கியும் அதிகப்பக்கங்கள் காரணமாக, வேலை பளு காரணமாக படிக்க முடியாதவர்கள் அல்லது வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லாதவர்கள் ஆடியோவைக் கேட்டுப் பயன்பெறலாம். உங்களுக்கு பிரியமானவர்களுக்கு நல்ல, உபயோகமான ஒரு பரிசு வழங்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த MP3 யை பரிசளிக்கலாம். மொத்த பகுதியும் 24 சிறு தலைப்புகளில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

http://www.wolfesimonmedicalassociates.com/zenegra/