ஞானமடைதல் குறித்து சத்குரு பல சத்சங்கங்களில் பேசியவற்றின் தொகுப்பாக இந்த நூல் வழங்கப்படுகிறது. ஞானமடைவது என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? இதற்காகவே ஈஷா யோகா மையம் எப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது? போன்ற இத்தனை கேள்விகளுக்கும் இந்த நூலில் விடை காணலாம். இந்த நூலைப் படிப்பதன் மூலம், நம்மிடையே ஒரு ஞானமடைந்த குரு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஞானமடைவது என்பது மிகத் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு மலரும் என்று நம்புகிறோம்.
